Last Updated : 20 Sep, 2016 03:36 PM

 

Published : 20 Sep 2016 03:36 PM
Last Updated : 20 Sep 2016 03:36 PM

ட்விட்டரில் மிச்சம் பிடிக்க நச்சென நான்கு புது அப்டேட்!

ட்விட்டர் தளத்தில் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இனி, ட்வீட்டுகளில் இணைக்கும் படங்கள், வீடியோக்கள் போன்றவை 140 கேரக்டர்களுள் கணக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் சிறப்பம்சம் மற்றும் பயனர்களை சில சமயங்களில் வெறுப்பேற்றும் அம்சம் ரெண்டுமே 140 கேரக்டர்கள் என்பதுதான். ஒரு ட்வீட்டில் அதிக பட்சம் 140 எழுத்துக்கள் மட்டுமே (வார்த்தை இடைவெளி உட்பட) ட்விட்டரின் விதி. இதில் ட்வீட்டில் வீடியோ, புகைப்படங்கள் போன்றவை இணைக்கப்பட்டிருந்தால் அவையும் 140 கேரக்டரில் கணக்கெட்டுக்கப்பட்டு வார்த்தைகள் எண்ணிக்கை குறையும். இதனால் ஒரு ட்வீட்டில் முடிய வேண்டிய தகவல் 2-3 என நீளும்.

இணைப்புகள் (லிங்க்), படங்கள், வீடியோக்கள், கருத்துக்கணிப்பு போன்றவற்றை 140 விதியிலிருந்து விலக்க கடந்த சில மாதங்களாகவே ட்விட்டர் பரீசலித்து வந்தது. தற்போது இது நடைமுறைக்கு வந்துள்ளது.

முக்கிய அம்சங்கள்

> இனி, ஒரு ட்வீட்டுக்கான பதிலில் (ரிப்ளையில்) @**** என சம்பந்தப்பட்டவரின் பெயரைக் குறிப்பிடும்போது, அது 140 கேரக்டரில் கணக்கெடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

> புகைப்படங்கள், ஜிஃப், வீடியோக்கள், கருத்துக் கணிப்பு போன்றவை 140க்குள் வராது.

> பயனர்களின் சொந்த ட்வீட்டுகளில் ரீட்வீட் அம்சம் அறிமுகப்படுத்தப்படும். இதனால் அதிக கவனம் பெறாத அல்லது சூழலுக்கு தகுந்த பழைய ட்வீட்டுகளை மீண்டும் ட்வீட் செய்யும் வசதி.

இந்த புதிய அப்டேட்டுகள் மூலம், ட்விட்டரின் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. புதிய அம்சங்களுக்கு பயனர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x