பாக். வான் வழி தாக்குதலில் 9 தீவிரவாதிகள் சாவு

பாக். வான் வழி தாக்குதலில் 9 தீவிரவாதிகள் சாவு
Updated on
1 min read

வடமேற்கு பாகிஸ்தான் ஹங்கு மாவட்டத்தில், தீவிரவாதிகள் புகலிடத்தில் ஹெலிகாப்டர் மூலம் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், “ஹங்கு மாவட்டத்தில் தால் நகருக்கு அருகில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதை நாங்கள் உறுதி செய்துகொண்டோம். அங்கி ருந்த தீவிரவாதிகள் தாக்குத லுக்கு திட்டமிட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சனிக்கிழமை அதிகாலை அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 9 பேர் கொல்லப் பட்டனர்” என்று தெரிவித்தன.

உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு ராணுவம் முழுத் திறனுடன் எப்போதும் தயார் நிலையில் உள்ளது என பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் வெள்ளிக்கிழமை கூறினார். இந்நிலையில் மறு நாள் இத்தாக்குதல் சம்பவம் நிகழ்ந் துள்ளது.

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ் தான் மற்றும் கைபர் ஏஜென்சி பகுதியில் திடீர் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளை எதிர்த்தும், அவர்களின் பதுங்குமிடத்திலும் ராணுவம் தரை வழி மற்றும் வான் வழி தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் இந்த வாரம் தீவிரவாதிகள் என சந்தேகிக் கப்படும் சுமார் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களின் கூட்டு முடிவுக்குப் பிறகு இப்பகுதிகளில் வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

தடை செய்யப்பட்ட “தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான்” அமைப்புடன் பேச்சு வார்த்தைக்கு அரசு முயற்சி செய்து வந்தது. இந்நிலையில் இந்த அமைப்பினர் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 23 பேரை கடத்திச் சென்று கொலை செய்ததால் சமரச முயற்சி 2010-ல் தடைபட்டது. இதையடுத்து உள்ளூர் அரசுடன் இணைந்து அவர்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

குண்டு வெடிப்பில் 3 பேர் பலி

இதனிடையே வடமேற்கு பாகிஸ்தான், கைபர் பக்துன்கவா மாநிலத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உள்ளூர் அரசியல் தலைவர் உள்ளிட்ட 3 பேர் இறந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in