ஹையான் புயல் தாக்குதலுக்கு பிலிப்பைன்ஸில் 10,000 பேர் பலி

ஹையான் புயல் தாக்குதலுக்கு பிலிப்பைன்ஸில் 10,000 பேர் பலி
Updated on
2 min read

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த ஹையான் சூப்பர் புயல் தாக்கு தலுக்கு இறந்தவர்கள் எண் ணிக்கை 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது அந்த நாட்டின் மிகவும் மோசமான இயற்கைப் பேரழிவாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஹையான் புயல், லெய்டே மற்றும் சமர் ஆகிய தீவுகளில் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு சுமார் 315 கி.மீ. வேகத்தில் கடும் சூறைக்காற்று வீசியது. அத்து டன் அடைமழையும் பெய்ததில் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப் பட்டுள்ளன.

கடலோரப் பகுதிகளில் சுனாமி போன்ற ராட்சத அலைகள் எழுந்து நிலப்பகுதியைத் தாக்கின. புயல் தாக்குதலுக்குள்ளான பகுதி களில் இருந்த வீடுகளில் 70 முதல் 80 சதவீதம் கடுமையாக சேதமடைந்துள்ளன.

லெய்டே மாகாணத்தின் டக்ளோ பான் நகரம் கடுமையான பாதிப்புக் குள்ளாகி உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கட்டிட இடிபாடுகளுக்குள் சடலங்கள் சிக்கிக் கிடப்பதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரி வித்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை தலைமை கண்காணிப்பாளர் எல்மர் சோரியா கூறுகையில், "புயல் பாதிப்பு குறித்து கவர்னரை சந்தித்துப் பேசினோம். அரசின் மதிப்பீட்டின்படி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம்" என்றார். இதற்கிடையே, உயிரு டன் இருப்பவர்கள் உணவு மற்றும் குடிநீரின்றி தவித்து வருகின்ற னர். அரிசி மற்றும் பால் பொருள் களுக்காக கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் கொள்ளை யடிக்கத் தொடங்கி இருப்பதால், அதைத் தடுப்பதற்காக சிறப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக போலீஸார் தெரி வித்தனர். சமர் மாகாணத்தின் பசர் நகரில் மட்டும் 300 பேர் இறந்த தாகவும், மாகாணம் முழுவதம் சுமார் 2,000 பேரைக் காணவில்லை என்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி தெரிவித்தார்.

அமெரிக்கா உதவிக்கரம்

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஹையான் புயலால் பாதிக்கப் பட்டுள்ள பிலிப்பின்ஸில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான ஹெலிகாப்டர், போர் விமானம் மற்றும் தரை வழி தேடுதல், மீட்பு வாகனங் களை வழங்குமாறு உத்தர விடப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு தொடர்பான நிலவரங்களை தொடர்ந்து கண்காணிக்குமாறும் தேவையான உதவிகளை வழங்கு மாறும் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை மற்றும் பிலிப்பைன்ஸுக்கான அமெரிக்க தூதருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சீனாவுக்கு சென்றது ’ஹையான்’

பிலிப்பைன்ஸை தாக்கிய ஹையான் புயல், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தென்சீனா கடல் பகுதியின் கிழக்குப் பகுதி வழியாக சீனாவுக்குள் நுழைந்தது.

இந்த புயல் மணிக்கு 30 முதல் 35 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஹைனான் மற்றும் சன்ஷா சிட்டியில் பலத்த காற்று வீசுவதுடன், அடைமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், அங்கு 2-ம் நிலை (ஆரஞ்சு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹையான் புயலை உன்னிப்பாக கவனித்து, அதுகுறித்து அறிவிப்பை அவ்வப்போது வெளியிடுமாறு ஹைனான் மற்றும் குவாங்டாங் மாகாண அரசுகள் மற்றும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற குவாங்சி ஜுவாங் அரசுகளை சீனாவின் வெள்ளத் தடுப்பு மற்றும் வறட்சி நிவாரண தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மீன்பிடி படகுகள் மூலம் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக துறைமுகத்துக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in