

அமெரிக்க வாழ் இந்தியரான அருண்குமாரை அந்நாட்டின் சர்வதேச வர்த்தக நிர்வாகத் துறையின் உயர் பொறுப்பில் நியமித்து அதிபர் பராக் ஒபாமா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசுத்துறை அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால் அந்நாட்டில் நெருக்கடி நிலவும் சூழலில் இந்த அறிவிப்பை ஒபாமா வெளியிட்டுள்ளார்.
வணிகத்துறையின் சர்வதேச வர்த்தக நிர்வாக பிரிவின் நிர்வாக இயக்குனராக அருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது சேவையால் அமெரிக்கா நன்மை பெறும் என தான் நம்புவதாக ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, இந்தியர்கள் பலரை உயர் பதவியில் அமர்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.