பாக். நடிகை கொலை வழக்கில் மனுதாரராக அரசு சேர்ப்பு

பாக். நடிகை கொலை வழக்கில் மனுதாரராக அரசு சேர்ப்பு
Updated on
1 min read

பாகிஸ்தான் நடிகை குவான்டீல் பலோச் வழக்கில் மாகாண அரசு புகார்தாரர் ஆக சேர்க்கப் பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரைச் சேர்ந்தவர் குவான்டீல் பலோச். நடிகையும் மாடலுமான அவர் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது தம்பி வாசிம் கடந்த 15-ம் தேதி அக்காவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். குடும்ப கவுரவத்தை காக்க குவான் டீலை கொலை செய்ததாகவும் அதற்காக வருத்தப்படவில்லை என்றும் வாசிம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுபோன்ற கவுரவ கொலை வழக்குகளில் கொலையாளிகளை குடும்பத் தினர் மன்னித்து விடுவதால் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையே கிடைக்கிறது.

இதை தடுக்க குவான்டீல் வழக்கில் பஞ்சாப் மாகாண அரசே புகார்தாரர் ஆக சேர்க்கப் பட்டுள்ளது. அதன்படி வாசிமை குடும்பத்தினர் மன்னிக்க முடி யாது. அவருக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in