

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த 1990-ம் ஆண்டு விண்ணில் அதிநவீன தொலைநோக்கியை செலுத்தியது. ஹப்பிள் என்று பெயரிடப்பட்ட அந்த தொலைநோக்கி 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல அரிய தகவல்களை அனுப்பி வருகிறது. இந்நிலையில், விண்வெளியில் தனித்து இருக்கும் விண்மீன் கூட்டத்தை (கேலக்ஸி) ஹப்பிள் படம் பிடித்து அனுப்பி உள்ளது. அந்த கேலக்ஸி மிகவும் சிறியதாக இருக்கிறது. விண்வெளியில் உள்ள மற்ற கேலக்ஸிகளை விட இது மர்மமான முறையில் நட்சத்திரங்கள் நிறைந்ததாக உள்ளது. அதற்கு ‘யூஜிசி 4879’ என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
இந்த கேலக்ஸி தன்னை சுற்றியுள்ள விண்மீன் கூட்டங்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.