Published : 05 Oct 2015 08:37 PM
Last Updated : 05 Oct 2015 08:37 PM

சீன பாரம்பரிய மூலிகை மருத்துவத்திலிருந்து ஊக்கம் பெற்ற நோபல் விஞ்ஞானி யூயூ டு

மலேரியாவுக்கு மாற்று மருந்தைக் கண்டுபிடித்ததற்காக 2015-ம் ஆண்டு மருத்துவ நோபல் பரிசை பகிர்ந்து கொண்ட சீன (பெண்) விஞ்ஞானி யூயூ டு, சீன பாரம்பரிய மருத்துவத்திலிருந்துதான் புதிய மலேரிய எதிர்ப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளார்.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறும் 12-வது பெண்மணி ஆவார் யூயூ டு. 4 ஆண்டுகளுக்கு முன்னதாக மருத்துவத்துறை பங்களிப்புக்காக இவர் லாஸ்கர் விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

மலேரியா சிகிச்சையில் பயன்பட்டு வந்த குளோரோகுயின் மருந்தையும் தடுத்தாட்கொள்ளும் நிலைக்கு மலேரிய கிருமி வேறு ஒரு நிலையை எட்டியதையடுத்து இதற்கு மாற்று மருந்தின் அவசியத்தை யூயூ டு உணர்ந்தார்.

இதனையடுத்து 1960-ம் ஆண்டுகளில் சீனாவின் கலாச்சாரப் புரட்சிக் காலக்கட்டங்களில் தனது சக தோழர்களுடன் இணைந்து இந்த ஆய்வில் கவனம் செலுத்தினார். இதனையடுத்து ஆர்டிமீஸியா ஆனுவா என்ற தாவரத்தின் மருத்துவ குணங்களுக்கு வந்தடைந்தார், வெகுஜன மொழியில் இது sweet wormwood என்று அழைக்கப்படுகிறது.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் நடத்தப்பட்ட கேள்வி-பதில் அமர்வில் இவரது கண்டுபிடிப்பு பற்றி எழுந்த சுவையான தகவல்கள் இதோ:

சீன மூலிகை மருந்தை மலேரிய சிகிச்சையில் யூயூ டு கொண்டு வந்தது பற்றி...

1,700 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மூலிகையின் காய்ச்சலை விரட்டும் தன்மை நிரூபிக்கப்பட்டது. ஆனால் யூயூ டு இந்த மூலிகையின் உயிரியல் ரீதியாக செயல்தன்மை மிகுந்த ஒரு மூலக்கூறை கண்டுபிடித்தார். இதுதான் மருத்துவ உலகில் பெரிய சட்டக மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் பிறகே ஆர்டிமிசினின் என்ற மருந்து பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டது பல்வேறு விதங்களில் சோதனை செய்யப்பட்டு வெற்றியடைந்தது.

பண்டைய, பாரம்பரிய, மாற்று மருத்துவத்தைப் பற்றிய மேற்கத்திய பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அங்கீகரிப்பதாகுமா இது?

புதிய மருந்துகளை உருவாக்குவதில் பல்வேறு விதங்கள் உள்ளன. பாரம்பரிய மருத்துவத்தின் நெடுங்கால அனுபவங்களை நாம் புறக்கணிக்க முடியாது. புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க அது அகத்தூண்டுதலாக அமையும். ஆனால் பழைய மூலிகைகளை அது எப்படியுள்ளதோ அப்படியே நாம் பயன்படுத்தப் போவதில்லை. அதிலிருந்து மருத்துவ சாராம்சங்களை வெளிக்கொணர மேம்படுத்தப்பட்ட புதிய முறைகள் உள்ளன.

இன்று ஆர்டிமிஸினின் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது?

பெரும்பாலும் ஆர்டிமீஸியா ஆனுவா மூலிகையை பாரம்பரியமாக வளர்த்து அதிலிருந்து தேவையான மருந்துப் பொருளை எடுப்பது, மற்றொரு முறை போட்டோ ஆக்டிவேஷன் மற்றும் கிரிஸ்டலைசேஷன் என்ற செயற்கை முறை.

ஆப்பிரிக்காவில் இந்த மருந்தையும் தடுக்கும் மலேரிய கிருமிகள் இல்லை. ஆனால் தெற்காசியாவில் லேசான தடுப்புகள் தென்பட்டன. இதனை எதிர்கொள்ள ஆர்டிமிஸினின் மருந்துடன் மலேரியாவுக்கு கொடுக்கப்படும் பிற மருந்துகளும் சேர்த்துக் கொடுக்கப்பட்டன. ஆனால் ஆர்டிமிஸினின் மலேரியா ஒட்டுண்ணிக் கிருமியின் ஆரம்பகால நிலைப்பெறுதலை பெருமளவு தடுத்து விட்டது. மேலும், மலேரியாக் காய்ச்சலில் இறப்போர் எண்ணிக்கை ஆர்டிமிஸினினால் பெருமளவு குறைந்தது.

நோபல் பரிசு கிடைத்த செய்தி யூயூ டு-வுக்கு எப்படி இருந்தது?

நாங்கள் இன்னமும் அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்த மருந்தின் காப்புரிமைச் சூழல் குறித்து...

காப்புரிமை இல்லை. நிறைய நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. மெர்க் (இவோமெக்டின்), நோவார்ட்டிஸ் (ஆர்டிமிசினின்). மேலும் உலக சுகாதார மையத்துடன் மருத்துவ நிறுவனங்களின் பெரிய தொழிலதிபர்கள் இந்த மருந்தை லாப நோக்கிற்காக அல்லாமல் விநியோகிக்க ஒன்று சேர்ந்திருப்பது வழக்கத்துக்கு மாறான நல்ல அறிகுறிகளை காண்பிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x