

கார்பரேட் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கான ஊதியத்தில் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான கொள்கை முடிவை எதிர்த்து சுவிட்சர்லாந்து மக்கள் வாக்களித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் வங்கித் துறை, மருந்து உற்பத்தி, இன்சூரன்ஸ் உள்பட பல்வேறு துறைகள் சார்ந்த நூற்றுக்கணக்கான கார்பரேட் நிறுவனங்கள் செயல்ப டுகின்றன.
இதன் தலைமை செயல் அதி காரிகளாகப் பணியாற்று பவர்கள் அந்த நிறுவனங்களின் கடைநிலை ஊழியரின் சம்பளத்தை விட 200 மடங்கு வரை அதிகம் ஊதியம் பெறுகின்றனர். இதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்து சோஷலிஸ்ட் தலைவர்கள் யோசனை தெரிவித்தனர்.
இதன்படி ஒரு நிறுவனத்தின் கடைநிலை ஊழியரின் சம்பளத்தை விட 12 மடங்கு அதிகமாக மட்டுமே தலைமை நிர்வாகிகளுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தப் பரிந்துரை தொடர்பாக பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவு கள் ஞாயிற்றுக்கிழமை வெளியி டப்பட்டன. இதில் 68.3 சதவீதம் பேர் பரிந்துரைக்கு எதிராகவும், 34.7 சதவீதம் பேர் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் தொழில் வளத்தைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் இந்த தீர்ப்பை அளித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து ஜனநாயக நடைமுறைகளின்படி அரசின் முக்கிய கொள்கை முடிவுகள் குறித்து மக்களின் கருத்தை அறிந்த பின்னரே அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதா, வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.