உக்ரைன் கலவரத்தைத் தடுக்க மேற்கத்திய தூதர்கள் முயற்சி

உக்ரைன் கலவரத்தைத் தடுக்க மேற்கத்திய தூதர்கள் முயற்சி
Updated on
1 min read

உக்ரைனில் அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதை தடுத்து நிறுத்த மேற்கத்திய தூதர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக உறவை புறக்கணித்து வரும் அதிபருக்கு எதிராக கடந்த 3 வாரங்களாக அந்த நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாது தலைநகர் கீவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸ், ராணுவ படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.

நாளுக்குநாள் பதற்றம் அதிகரித்து வருவதால் கலவரத்தை தடுத்து நிறுத்த மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் உக்ரைனுக்கு விரைந்துள்ளனர். அவர்கள் அரசுடனும் போராட்டக்காரர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தலைநகரில் உள்ள முக்கிய அரசு கட்டடங்களை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். திங்கள்கிழமை இரவு அவர்களை அப்புறப்படுத்த போலீஸார் முயன்றனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இதில் பொதுமக்களில் பலர் காயமடைந்தனர்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னாள் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் முடிவு செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in