ஜப்பானில் பனிப்புயல் 2 பேர் பலி, 90 பேர் காயம்

ஜப்பானில் பனிப்புயல் 2 பேர் பலி, 90 பேர் காயம்
Updated on
1 min read

ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் அந்நாட்டின் இதர பகுதி களில் நிலவும் பனிப்புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக 2 பேர் பலியாகி உள்ளனர். 90 பேர் காயமடைந்தனர்.

டோக்கியோவில் கடும் பனிப் புயல் வீசும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் 610 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஹிரோஷிமா மற்றும் ககவா ஆகிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

மேற்கு ஜப்பானில் ஷின்கன்சென் புல்லட் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்தும் முடங்கி உள்ளன. சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக் கப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்தம் கிழக்கு ஜப்பானை நோக்கி நகர்ந்து வருவ தாகவும் டோக்கியோ சாலை களில் 12 செ.மீ. உயரத்துக்கு பனிக்கட்டி கள் உரைந்து காணப்பட்டதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடும் பனிப்பொழிவுடன் காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக் கின்றனர். இதன் காரணமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி 89 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் 17 பேர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு வானொலி என்எச்கே தெரிவித்துள்ளது.

மேலும், பனி காரணமாக சனிக் கிழமை நிகழ்ந்த கார் விபத்துகளில் 2 மூதாட்டிகள் இறந்ததாகவும் என்எச்கே தெரிவித்துள்ளது. வானிலை தொடர்ந்து மோசமாக இருக்கும் என்றும் 20 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு இருப்பதால் அவசியம் இல்லாமல் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in