Published : 19 Dec 2013 12:00 AM
Last Updated : 19 Dec 2013 12:00 AM

போப்பாண்டவரின் 77-வது பிறந்தநாள்

போப்பாண்டவர் பிரான்சிஸ் தனது 77 வது பிறந்தநாளை வீடில்லாமல் சாலையோரம் வசிக்கும் 3 பேருடன் செவ்வாய்க்கிழமை கொண்டாடினார். மூவரில் ஒருவர் தன்னுடன் தனது செல்லப்பிராணியான நாய்க்குட்டியையும் கொண்டு வந்திருந்தார்.

பிறந்தநாள் அன்பளிப்பாக போப்பாண்டவருக்கு அவர்கள் சூரியகாந்தி மலர்க் கொத்து வழங்கினர். பிறந்தநாள் பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மூவரும் போப்பாண்டவருடன் ஹோட்டலில் காலை உணவு விருந்தில் கலந்துகொண்டனர்.

பிறந்தநாள் பிரார்த்தனையில் கலந்து கொள்ளவரும்படி வாடிகன் நகருக்கு வெளியே சாலையோரம் வசிக்கும் அந்த மூவருக்கும் செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி பங்கேற்ற அவர்களுடன் போப் தனித்தனியாக பேசி மகிழ்ந்தார். ஏற்கெனவே சனிக்கிழமை அவருக்கு வாடிகனில் சிறுவர்கள் அன்பளிப்பாக பிறந்த நாள் கேக் கொடுத்தனர்.

இன்னொரு அன்பளிப்பும் அவருக்கு காத்திருக்கிறது. ஆர்ஜென்டீனா கால்பந்தாட்டக் குழுவினர் (சான் லொரான்ஸோ), தமக்கு கிடைத்த சாம்பியன்ஷிப் கோப்பையின் மாதிரி வடிவை கொடுக்க உள்ளனர். இந்த குழுவினர் போப்பாண்டவரை சந்திக்க தனியாக நேரம் ஒதுக்கித் தரப்படவில்லை என வாடிகன் நகர நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x