அமைதிக்காக பணியாற்றி வரும் பாகிஸ்தான் இந்து இளைஞருக்கு அமெரிக்காவின் கவுரவ விருது

அமைதிக்காக பணியாற்றி வரும் பாகிஸ்தான் இந்து இளைஞருக்கு அமெரிக்காவின் கவுரவ விருது
Updated on
1 min read

அமைதிக்காக சிறந்த முறை யில் பங்களிப்பை வழங்கிவரும் பாகிஸ்தான் இந்து இளைஞர், அமெரிக்காவின் கவுரவு விருதுக் குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உலகில் நீடித்த அமைதிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கி வரு பவர்களுக்கு, ‘புதிதாக உருவாகி வரும் இளம் தலைவர்கள்’ என்ற பெயரில் அமெரிக்க வெளியுறவுத் துறை ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மால்டா, இலங்கை, ஆப்கானிஸ் தான், அல்ஜீரியா, தஜிகிஸ்தான், பெல்ஜியம், வியட்நாம், பெரு, இஸ்ரேல், பாகிஸ்தான் ஆகிய 10 நாடுகளைச் சேர்ந்த இளைஞர் களை அமெரிக்க தேர்ந்தெடுத் துள்ளது.

குறிப்பாக பாகிஸ்தானில் அமைதிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் ராஜ்குமார் என்பவர், இளம் தலைவர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நீடித்த அமைதிக்காக இளைஞர் களை ஒருங்கிணைத்து விழிப் புணர்வு ஏற்படுத்தி வருவதற்காக இந்த விருது அவருக்கு வழங் கப்படுகிறது. விருதுக்கு தேர்ந் தெடுக்கப்பட்ட இளைஞர்களை அமெரிக்காவுக்கு அழைத்து பல் வேறு நிகழ்ச்சிகளை வெளியுறவுத் துறை நடத்தும். அதன்படி, ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஆரம்பத்தில் பாகிஸ்தான் அமெரிக்க முன்னாள் மாணவர்கள் நெட்வொர்க்கில் ராஜ்குமார் உறுப்பினராகி துடிப்புடன் செயல் பட்டுள்ளார். அதன்பின் அந்த அமைப்பில் பல்வேறு தலைவர் பொறுப்புகளை ஏற்று, சிறந்த முறை யில் இளைஞர்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தி உள்ளார். கலை, ஓவியம், விளையாட்டு, உரையாடல், இசை ஆகியவற்றின் மூலம் தீவிரவாதத்தை எதிர்த்தும் சமுதாயத்தில் அமைதிக்காகவும் பல்வேறு பணிகளில் இவர் ஈடுபட்டுள்ளார். அதற்காக அவருக்கு 10 ஆயிரம் டாலர்களை அமெரிக்கா வழங்கி உள்ளது.

அத்துடன் பெண்களின் உரிமை களைப் பாதுகாக்க பாகிஸ்தான் சட்டங்களில் கூறப்பட்டுள்ள விவரங்கள் குறித்து அந்நாட்டு பெண்களுக்கு கற்றுத் தந்திருக் கிறார். தீவிரவாதத்தை இளைஞர் கள் எதிர்கொள்வது எப்படி என்று பாகிஸ்தான் தொலைக்காட்சி மற்றும் பிரபல ‘டான்’ பத்திரிகை யில் ராஜ்குமார் தொடர்ந்து தனது கருத்துகளைத் தெரிவித்து வரு கிறார். இதுபோன்ற பல்வேறு பணி களுக்காக கவுரவமிக்க விருதுக்கு ராஜ்குமார் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார் என்று அமெரிக்க வெளி யுறவுத் துறை அமைச்சகம் வெளி யிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in