Last Updated : 11 Jun, 2017 12:05 PM

 

Published : 11 Jun 2017 12:05 PM
Last Updated : 11 Jun 2017 12:05 PM

ஜப்பானுக்கு பெண் அதிபர்?

ஜப்பானிய அதிபர் பதவி விலகு வது என்பது அரிதான விஷயம். அப்படியொரு நிகழ்வு சுமார் 200 வருடங்களுக்குப் பிறகு நடக்க விருக்கிறது. அடுத்து யார் என்பது தொடர்பான விவாதங்கள் நடை பெறத் தொடங்கியிருக்கின்றன.

80 வயதான சக்ரவர்த்தி அகி ஹிடோ 1989-ல் இருந்து ஜப்பானின் அதிபராக விளங்குகிறார். இவர் உடல்நிலை மோசமாக உள்ளது. புற்று நோய்க்காக 2003-ல் ஓர் அறுவை சிகிச்சையும், 2012-ல் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை யும் செய்யப்பட்டிருக்கின்றன. விரைவில் (2018-க்குள்) இவர் பதவி விலகிவிட வாய்ப்பு உண்டு.

அடுத்தது யார்? இவரது மூத்த மகன் இளவரசன் நருஹிடோ என்ப வரா? ஜப்பானிய சட்டப்படி எந்தச் சக்ரவர்த்தியும் தான் உயிருடன் இருக்கும்போதே தன் வாரிசை அறிவிக்கக் கூடாது.

ஜப்பானிய நாடாளுமன்றம் ஒரு சிறப்பு சட்டத்தை இயற்றி யிருக்கிறது. இது சக்ரவர்த்தி அகிஹி டோவை ஓய்வு பெற அனுமதிக் கிறது. கூடவே அரச வம்சத்தைச் சேர்ந்த பெண்களும் அதிபராகலாம் என்று நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருப்பது அந்த நாட்டில் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. ஜப்பானியப் பிரதமர் ஷின்ஜோ அபே, பெண்களுக்கான அரசியல் முக்கியத்துவத்தை அவ்வப்போது குறிப்பிடுகிறார்.

ஆனால் இதற்கு முன்பு வரை பெண்கள் சக்ரவர்த்தி(னி) ஆவதை அந்த நாட்டு சட்டம் அனுமதிக் கவில்லை. மாறிவரும் போக்கு காரணமாகவும், ஆண் வாரிசுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதன் காரணமாகவும், புதிய ஆலோசனை நாடாளுமன்றத்தால் கூறப்பட்டிருக்கிறது.

சக்ரவர்த்தி அகிஹிடோ ஜப் பானிய மக்களின் பேராதரவைப் பெற்றவர். இவரும் இவரது மனைவி மிசிகோவும் பல நாடுகளுக்குப் பயணம் செய்து ஜப்பான் குறித்த நல்லெண்ணங்களை விதைத்துள்ளனர்.

உடனடியாக அகிஹிடோ விற்குப் பிறகு எந்தப் பெண்ணும் அந்தப் பதவியை வகித்துவிடப் போவதில்லை. ஆனால் திருமணம் செய்து கொண்ட அரச வம்சத்துப் பெண்களும் கூட அரியணையை அலங்கரிக்கலாம் என்ற அளவுக்கு அறிமுகமாயிருக்கும் சட்டமே கூட ஒரு மிகப் பெரும் திருப்பு முனைதான். இதற்கு முன் திருமண மானவுடனேயே அரச வம்சத்துப் பெண்கள் அரச குடும்பத்திலிருந்தே வெளியேற்றப்பட்டதாகத்தான் கருதப்படுவார்கள். (அங்குள்ள கன்சர்வேடிவ் கட்சியினர் இதை பலமாக எதிர்க்கிறார்கள் என்பது வேறு விஷயம்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x