

ஜெர்மனியில் உள்ள V8 ஹோட்டல், வாகனப் பிரியர்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு 34 தங்கும் அறைகள் உள்ளன. பெட்ரோல் பங்க், சாலைப் பயணம், கார் ஷெட், கார் தொழிற்சாலை, கார் பந்தயம், பழுது பார்க்கும் இடம் என்று ஒவ்வோர் அறையும் ஒவ்வொரு விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படுக்கையை கார் போலவே உருவாக்கி இருக்கிறார்கள். இவை தவிர, கார் பொம்மைகள், சுவரில் ராட்சச கார் புகைப்படங்கள், காரின் உதிரி பாகங்களை வைத்து சுவர் அலங்காரம் என்று ரசனையுடன் அமைத்திருக்கிறார்கள். கார் மற்றும் கார் பந்தய வீரர்கள் தொடர்பான புத்தகங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. ஹோட்டலின் முகப்பில் பழைய மாடல் கார்களின் அணிவகுப்பு இருக்கிறது. டிரைவ் இன் தியேட்டரும் உண்டு. ஜெர்மனியிலேயே விலை அதிகமான தங்கும் விடுதிகளில் இதுவும் ஒன்று.
ஓடாத கார்கள்!
ரஷ்யாவைச் சேர்ந்த உல்யானா, விடுமுறைக்காக தனது பெற்றோருடன் தாய்லாந்து கிளம்பினாள். அவளுடைய கரடி பொம்மையை விமான நிலையத்திலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். விமானத்தில் புறப்பட்ட பிறகுதான் கரடி பொம்மை நினைவுக்கு வந்தது. உல்யானா கரடி பொம்மையைக் கேட்டு அழ ஆரம்பித்துவிட்டாள். எவ்வளவோ சமாதானம் செய்தும் அவள் வருத்தத்தைக் குறைக்க முடியவில்லை. உடனே உல்யானா அம்மா, விமான நிலையத்துக்கு ஒரு இமெயில் அனுப்பினார். அதில் அந்தக் கரடி பொம்மையை பத்திரமாக எடுத்து வைக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதையடுத்து விமான நிலைய ஊழியர்கள், கரடி பொம்மையை ஜன்னல், உணவு மேஜை போன்ற இடங்களில் வைத்துப் புகைப்படங்கள் எடுத்து, உல்யானாவின் அம்மாவுக்கு அனுப்பி வருகிறார்கள். தன் பொம்மை பத்திரமாக இருப்பதை அறிந்த உல்யானா மகிழ்ச்சியோடு ரஷ்யா திரும்பும் நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள்.
குழந்தையின் வருத்தத்தைப் போக்கிய ஊழியர்களுக்கு நன்றி.
என்னதான் அலங்காரம் செய்துகொண்டாலும் வயதானால் கழுத்தில் தொங்கும் சதைகளை ஒன்றும் செய்ய இயலாது. அதற்காகவே Nexsey Tape உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை எடுத்து கழுத்தின் பின்பகுதியில் தொங்கும் சதைகளைச் சேர்த்து ஒட்டவேண்டும். சட்டென்று சில வருடங்கள் பின்னோக்கிச் சென்று, இளமையாகத் தோற்றம் அளிக்க முடியும். லிண்டா கோமெஸ் என்ற அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பாளர் நெக்ஸியை உருவாக்கி இருக்கிறார். “உலகம் முழுவதும் வயதானவர்களுக்கு கழுத்துச் சதைகள் தொங்கிவிடுகின்றன. எல்லோராலும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள இயலாது. அதற்காகவே நான் இந்த நெக்ஸியை உருவாக்கினேன். இதைப் பயன்படுத்துவதற்கு அதிகம் செலவு செய்ய வேண்டாம். வலி இருக்காது. யாருடைய உதவியும் தேவைப்படாது. துணி, முடியால் நெக்ஸியை மறைத்தும் விடலாம். பெண்களுக்கு இது மிகவும் பயன்படும்” என்கிறார் லிண்டா கோமெஸ்.
நெக்ஸியின் மாயாஜாலம்!