அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றார் டொனால்டு ட்ரம்ப்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றார் டொனால்டு ட்ரம்ப்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
Updated on
1 min read

அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் (70) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா கடந்த 2009-ல் முதல் கறுப்பின அதிபராக பொறுப்பேற்றார். பின்னர் 2013-ல் 2-வது முறையாக ஒபாமா அதிபராக பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் முடிய இருந் ததையடுத்து, கடந்த நவம்பர் 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடை பெற்றது.

இதில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டனும் குடியரசு கட்சியின் சார்பில் ட்ரம்பும் போட்டி யிட்டனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்ரம்ப் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினரா். இதனிடையே, ஹிலாரி வெற்றி பெறுவார் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்தன. இதையெல்லாம் பொய்யாக்கி ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்நிலையில், வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய மைதானத்தில் (கேப்பிட்டால்) பதவி யேற்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் ஒபாமா, பில் கிளின் டன், ட்ரம்ப் குடும்பத்தினர், ஹிலாரி கிளின்டன் உட்பட சுமார் 8 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இவ்விழாவில், வரலாற்று சிறப்பு மிக்க ஆப்ரகாம் லிங்கனின் பைபிளின் மீது டொனால்டு ட்ரம்ப் தனது கையை வைத்து, நாட்டின் 45-வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமானம் செய்து வைத்தார். முன்னதாக, மைக் பென்ஸ் துணை அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.

முன்னதாக, வெள்ளை மாளிகை யில் ஒபாமாவை ட்ரம்ப் சந்தித்துப் பேசினார். அப்போது, ஒபாமாவும் அவரது மனைவி மிஷேலும் ட்ரம்ப்-மெலனியா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அனைவரும் பதவியேற்பு விழா நடைபெற்ற இடத்துக்கு வந்தனர்.

பதவியேற்றுக்கொண்ட பிறகு ட்ரம்ப் பேசும்போது, “இந்த நாள் உங்களுடையது, இந்த விழா உங்களுடையது, இது உங்கள் நாடு. அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அமெரிக்கர்களும் அவர்களது குடும்பத்தினரும் பயனடையும் வகையில் இருக்கும்” என்றார்.

மோடி வாழ்த்து

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்ட ட்ரம்புக்கு ட்விட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி கூறும்போது, “இந்திய-அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்து ட்ரம்புடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in