Published : 16 Mar 2014 12:00 AM
Last Updated : 16 Mar 2014 12:00 AM

தடை வேண்டுமா? மார்க்க அறிஞர் பேட்டி

‘தி இந்துவுக்கு இஸ்லாமிய மார்க்க அறிஞர் முகம்மதுகான் பாகவி அளித்த பேட்டி வருமாறு: சவூதி அரேபியா தடை விதித்துள்ள பல பெயர்கள், இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கைக்கு முரணான அர்த்தம் தரும் வகையில் உள்ளதாகத் தெரிகிறது.

உதாரணமாக நபி என்ற பெயர். நபி என்றால் இறைத் தூதர் என்று பொருள். ஒருவர் தன்னைத் தானே எந்தத் தகுதியுமின்றி நபி, என்று இறைத்தூதர்களுக்கு இணையாகத் தங்களைக் கூற முடியாது. இதேபோல் அப்துல் ரசூல் என்ற பெயரில் அப்துல் என்றால் அடிமை, அதாவது அனைத்து வகையிலும் கட்டுப்பட்டு வழிபடக் கூடியவன் என்ற பொருளாகும். ரசூல் என்றால் இறைத் தூதராகும்.

இறைத்தூதரின் அடிமை என்று பெயர் வைக்க முடியாது. ஆனால், இறைவனின் அடிமை, இறைவனை வணங்குபவன் என்று பொருள்படும் வகையில், அப்துல் என்ற பெயருடன் இறைவனின் பெயர்களைச் சேர்த்து வைக்கலாம்.

பின்யாமின் (பெஞ்சமின்) என்ற பெயர், இறைத் தூதர்களில் ஒருவரது பெயராகும். அந்தப் பெயரை வைத்துக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இஸ்ரேல் பிரதமரின் பெயர் பெஞ்சமின் என்பதால், இறைத் தூதரின் பெயரை நாம் வைத்துக் கொள்ளக்கூடாது என்பது சரியல்ல.

இந்தியாவைப் பொறுத்த வரை, முஸ்லிம்கள் பெரும்பாலும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் ஆலோசனை பெற்று, அர்த்தங் களைத் தெரிந்தே தற்போது பெயர் வைக்கின்றனர்.

இந்தியாவில் இதுபோன்ற பெயர்கள் வைக்க முஸ்லிம் களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டிய அவசிய மில்லை. இவ்வாறு முகம்மது கான் பாகவி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x