

நடுவானில் மாயமான மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தை (எம்.எச். 370) தேடும் பணியை மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் நிறுத்தியுள்ளன.
கடந்த 2014 மார்ச் 8-ம்தேதி மலேசிய தலைநகர் கோலாலம் பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது.
அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக தேடும் பணி நடை பெற்று வந்தது. இப்பணியில் மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து செயல் பட்டன. 1,20,000 சதுர கி.மீ. பரப்பள வில் தேடியும் இதுவரை விமானத் தின் சிறு பாகம்கூட கண்டுபிடிக்கப் படவில்லை.
மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா நாடுகளின் போக்குவரத்து துறை அமைச்சர்கள் மலேசியாவின் புட்ராஜயா நகரில் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் விமானத்தை தேடும் பணியை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.