மோடியின் அமெரிக்க பயணம் நட்புறவை வெளிக்காட்டுவதாக அமையும்: வெள்ளை மாளிகை கருத்து

மோடியின் அமெரிக்க பயணம் நட்புறவை வெளிக்காட்டுவதாக அமையும்: வெள்ளை மாளிகை கருத்து
Updated on
1 min read

இந்திய பிரதமர் நரேந்திர மோடி யின் அமெரிக்க பயணம், இரு நாடுகள் இடையே வளர்ந்து வரும் நட்புறவை வெளிப்படுத்துவதாக அமையும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

அதிபர் ஒபாமாவின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்கா செல்கிறார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசு கின்றனர். இந்த சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடிக்கு அதிபர் ஒபாமா விருந்தளிக்கிறார்.

இந்நிலையில் பிரதமரின் அமெரிக்கப் பயணம் குறித்து வெள்ளை மாளிகை மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, “பிரதமர் மோடியின் பயணம் இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பு வளர்ந்து வருவதையும் உலக அரங்கில் இரு நாடுகளும் இணைந்து தலைமையேற்று செயல் படுவதையும் வெளிப்படுத்துவதாக அமையும். அமெரிக்க இந்திய உறவில் இந்தப் பயணத்தால் குறிப் பிடத்தகுந்த மாற்றம் ஏற்படும். கடந்த 7 ஆண்டுகளில் அமெரிக் காவும் இந்தியாவும் நீடித்த நட்புற வுக்கு அடித்தளமிட்டுள்ளன. தடைகளற்ற சமுதாயம், சட்டத்தின் அடிப்படையிலான ஒழுங்குக்கு மரியாதை ஆகியவற்றை பண்பு களாகக் கொண்டுள்ளன.

பருவநிலை மாற்ற பிரச்சி னைக்கு தீர்வு காண்பது, தூய்மை யான எரிசக்திக்கான தீர்வுகளை வழங்குவது, பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுப்படுத் துவது, இணைய உலகத்தை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக் கான கருவியாக பாதுகாப்பது, கடல், ஆகாயம் மற்றும் விண் வெளியில் நமக்கான இடங்களை பாதுகாப்பது என பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படும்போது, இந்த உலகம் இன்னும் சிறப்படையும்” என்றார்.

மோடியின் இப்பயணத்தின் போது இந்தியாவுடன் பொருளாதார மற்றும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக நாளேடுகள் கூறுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in