

அமெரிக்க வெளியுறவு கொள்கையால் பிரான்ஸ் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு அதிபர் ஹோலாந்தே குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் மீது அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் போர் தொடுத்தார். அதைத் தொடர்ந்து இராக் மீதும் போர் தொடுத்தார். அதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு பிரான்ஸ் இப்போது தீவிரவாத அச்சுறுத்தலில் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சிரியா, இராக்கை மையமாகக் கொண்டு செயல்படும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரான்ஸ் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஈபிள் டவர் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்த 15 வயது சிறுவனை அந்த நாட்டு போலீஸார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இந்தப் பின்னணியில் அமெரிக்கா மீது பிரான்ஸ் அதிபர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.