சிஎன்என் இணையதளத்தில் ஊடுருவல்

சிஎன்என் இணையதளத்தில் ஊடுருவல்
Updated on
1 min read

அமெரிக்க செய்தி ஊடக நிறுவனமான சிஎன்என்-னின் சமூக இணையதளப் பக்கங்களில் சிரியாவைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி, அதில் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

‘சிஎன்என் நிறுவனத்தின் ஃபேஸ்புக், ட்விட்டர், வலைப்பூ தளங்களில் அத்துமீறி நுழைந்துள்ள சிரியன் எலக்ட்ரானிக் ஆர்மி சில தவறான தகவல்களைப் பதிவு செய்துள்ளது. அப்பதிவுகள் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டன.

தற்போது, சமூக வலைத்தளத்தில் உள்ள எங்களின் பக்கங்கள் பாதுகாப்பாக உள்ளன’ என்று சிஎன்என் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிஎன்என் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், “சிரியன் எலக்ட்ரானிக் ஆர்மி இங்குள்ளது. பொய் சொல்வதை நிறுத்துங்கள். உங்களின் செய்திகள் அனைத்தும் பொய்யானவை” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஊடுருவலுக்குப் பின்னணியில் நாங்கள் இருக்கிறோம் என சிரியன் எலக்ட்ரானிக் ஆர்மி ஒப்புக் கொண்டுள்ளது. சிஎன்என் நிறுவனம் சிரியாவுக்கு எதிரான பொய்யான தகவல்களைப் பதிவு செய்வதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த இணையதள தாக்குதலை நடத்தியாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in