

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் விமான நிலையத்தில் மிகப் பெரிய குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் போர் கண்காணிப்புக் குழு வெளியிட்ட தகவலில், "சிரிய அரசின் கட்டுபாட்டுப் பகுதியான தலைநகர் டமாஸ்கஸிலுள்ள விமான நிலையத்தின் அருகே இன்று (வியாழக்கிழமை) மிகப்பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதனால் அங்கு தீப்பிழம்புகள் மேலெழுந்தன. குண்டு வெடிப்பில் யார் ஈடுபட்டது என்றும், குண்டுவெடிப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இதுவரை தெளிவான தகவல் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு குறித்த காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் ஈரான் ஆதரவுப் படைகள் இந்தக் குண்டுவெடிப்பை நிகழ்ந்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.