

மாயமான மலேசிய விமானத்தின் கேப்டன் அகமது ஷா வீட்டில் மலேசிய போலீசார் சோதனை நடத்தியதாக தெரிகிறது.
மலேசிய விமானம் எம்.எச்.370 கடந்த சனிக்கிழமை காணாமல் போனது. சரியாக 8 நாட்கள் ஆன நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக், விமானத்தின் தொலை தொடர்பு உகரணங்கள் வேண்டும் என்றே துண்டிக்கப்பட்டுள்ளன என்பது உறுதியாக தெரிகிறது. விமானம் கடத்தப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் விமானம் கடத்தப்பட்டது உறுதியாகவில்லை என தெரிவித்திருந்தார்.
மேலும், விமான குழுவினர் மற்றும் பயணிகள் குறித்து மலேசிய போலீசார் கவனம் செலுத்துவர் எனவும் அவர் கூறியிருந்தார்.
இவ்வாறு பிரதமர் பேட்டியளித்த சில மணி நேரத்தில், மாயமான மலேசிய விமானத்தின் கேப்டன் அகமது ஷா வீட்டிற்கு மலேசிய போலீசார் சென்றனர்.