Published : 09 Feb 2014 12:00 AM
Last Updated : 09 Feb 2014 12:00 AM

சோச்சி குளிர்கால ஒலிம்பிக் ரஷ்ய அதிபர் புதின் தொடங்கி வைத்தார்

ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர் கால ஒலிம்பிக் போட்டியை அதிபர் விளாதிமிர் புதின் தொடங்கி வைத்தார்.

இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் போட்டி தொடங்கியது. வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா நடைபெற்றது. சுமார் 40 ஆயிரம் பேர் விழாவை நேரில் கண்டு ரசித்தனர்.

ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஒலிம்பிக் தீபத்தை போட்டி நடைபெறும் அரங்கத்துக்கு எடுத்து வந்தார். ரஷ்யாவைச் சேர்ந்தவரும், ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வென்றவருமான அலினா கபாயேவாவும் ஜோதி ஓட்டத்தில் பங்கேற்றார். தன் பாலின சேர்க்கையாளர் உரிமை பிரச்னை, பயங்கரவாத அச்சுறுத்தல், போட்டி ஏற்பாடு களில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களுக்கு நடுவே போட்டி தொடங்கி யுள்ளது.

தொடக்க நிகழ்ச்சியில் புதின் உரையாற்றவில்லை. ஐ.நா. தலைவர் பான்-கி-மூன், சீன அதிபர் ஜின் ஜிபியாங், உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச் உள்ளிட்ட 40 நாடுகளுக்கும் மேற்பட்ட தலைவர்கள் தொடக்க விழாவில் பங்கேற்றனர். இவர்கள் அனைவரையும் புதின் வரவேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x