ஹாங்காங் தலைமை நிர்வாகியாக சீன ஆதரவாளர் கேரி லாம் தேர்வு

ஹாங்காங் தலைமை நிர்வாகியாக சீன ஆதரவாளர் கேரி லாம் தேர்வு
Updated on
1 min read

ஹாங்காங்கின் தலைமை நிர்வாகியாக சீன ஆதரவாளர் கேரி லாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சீனாவின் ஒரு பகுதியான ஹாங்காங் தன்னாட்சி அதிகாரத் துடன் செயல்படுகிறது. அங்கு 1200 பேர் கொண்ட தேர்தல் குழுவினர் தலைமை நிர்வாகியை தேர்வு செய்கின்றனர்.

தற்போதைய தலைமை நிர்வாகி லியாங்கின் பதவிக் காலம் நிறைவடைந்ததால் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 777 பேர் ஆதரவுடன் கேரி லாம் புதிய தலைமை நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹாங்காங்கின் தலைமை நிர்வாகியாக ஒரு பெண் பொறுப் பேற்பது இதுவே முதல்முறை யாகும். இவர் சீனாவின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

கடந்த 2014-ம் ஆண்டில் சீனா விடம் இருந்து சுதந்திரம் கோரி ஹாங்காங்கில் பெரும் போராட்டம் வெடித்தது. அந்த போராட்டம் ஒடுக்கப்பட்டது. தற்போது சீன ஆதரவாளர் தலைமை நிர்வாகியாக தேர்வு செய்யப்பட்டிருப்பதால் அவ ருக்கு எதிராக சமூக வலைதளங் களில் கருத்துகள் பதிவு செய்யப் பட்டு வருகின்றன.

கேரி லாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in