சிங்கப்பூர் போலீஸாருக்கு எதிராக 3 இந்தியத் தொழிலாளர்கள் புகார்- அடித்து உதைத்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு

சிங்கப்பூர் போலீஸாருக்கு எதிராக 3 இந்தியத் தொழிலாளர்கள் புகார்- அடித்து உதைத்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு
Updated on
1 min read

சிங்கப்பூர் போலீஸார் தங்களை அடித்து உதைத்து துன்புறுத்தியதாக அந்த நாட்டு உயர்நிலை விசாரணை அமைப்பிடம் மூன்று இந்தியத் தொழிலாளர்கள் புகார் அளித் துள்ளனர்.

சிங்கப்பூர் ‘லிட்டில் இந்தியா' பகுதியில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி பெரும் கலவரம் வெடித்தது. இதுதொடர்பாக இந்திய தொழி லாளர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அவர்களில் 3 பேர் சிங்கப்பூர் போலீஸாருக்கு எதிராக புகார் மனு அளித்துள் ளனர். சிங்கப்பூர் போலீஸ் துறையில் எழும் புகார்களை விசாரிக்க ஐ.ஏ.ஓ. என்ற அமைப்பு உள்ளது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற அந்த அமைப்பிடம்தான் ராஜேந்திர மோகன் (25), ரவி அருண் வெங்கடேஷ் (24), அருண் கலியமூர்த்தி (28) ஆகிய 3 இந்திய தொழிலாளர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

புகார் மனுவில் ராஜேந்திர மோகன் கூறியிருப்பதாவது: சிங்கப்பூரில் பணியாற்றும் சக தமிழர்களுக்காக நான் செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நான் ஒப்புக் கொள்ள வில்லையெனில் எனது உடல்தான் ஊருக்கு போய் சேரும் என்று போலீஸார் மிரட்டினர் என்று தெரிவித்துள்ளார்.

அருண் கலியமூர்த்தி தனது புகார் மனுவில், “கலவரத்தின் போது என்னை கைது செய்த போலீஸார், கன்னத்தில் பல முறை அறைந்தனர். முகத் தில் ஓங்கி குத்தினர். ஒரு பெண் போலீஸ் அதிகாரியும் என்னை துன்புறுத்தினார்” என்று தெரிவித் துள்ளார். சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நிருபர்களிடம் பேசியபோது, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in