

நவம்பர் மாதம் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்காளிக்கவுள்ளதாக அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடன் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவிலிருந்து வீடியோ மூலம் ஏதென்ஸில் நடைபெற்ற கருந்தரங்கில் பேசிய ஸ்னோடன், "நடைபெறவிருக்கும் அமெரிக்க தேர்தலில் வாக்களிக்க உள்ளேன். ஆனால் நான் யாருக்கு எனது வாக்கை அளிக்க உள்ளேன் என்பதை கூற இயலாது. என்றார்.
அமெரிக்காவிடம் பொது மன்னிப்பு கேட்டு மேற்கொண்ட பிரச்சாரத்துக்கு உதவிய மனித உரிமை அமைப்புகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
33 வயதான ஸ்னோடனின் வாழ்க்கையை மையமாக எடுக்கப்பட்டுள்ள படத்தின் வெளியிட்டு நிகழ்வும் இந்த கருந்தரங்கில் நடைபெற்றது. இப்படத்தில் எட்வர்டு ஸ்னோடனாக ஜோசப் கார்டன் லெவிட் நடித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க உலக நாடுகளின் ரகசியங்களை வேவுப் பார்க்கிறது என்று அமெரிக்காவின் உளவு ரகசியங்கள் பலவற்றை வெளிப் படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்னோடன். பிற நாடுகளின் அரசு செயல்பாடுகளையும், சொந்த நாட்டு மக்களையும் அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வருவதை அவர் உலகுக்கு பகிரங்கப்படுத்தினார்.
அதனை தொடர்ந்து அமெரிக்க எட்வர்டு ஸ்னோடனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.