

ஆப்கானிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 16 பேரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். மேலும் 30 பேரை பிடித்து வைத்துள்ளனர்.
வடக்கு ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் மாகாணம் அலியாபாத் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந் துள்ளது. எனினும், தலிபான்கள் இதுவரை இச்சம்பவம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
குண்டுஸ் ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் மகமூத் டேனிஷ் கூறும்போது, “தலிபான்கள் 16 பயணிகளை சுட்டுக் கொன்றுள் ளனர். 30 பேரை பிடித்து வைத் துள்ளனர்” என்றார்.
காவல் துறை கமாண்டர் ஷிர் ஆசிஷ் கமாவால், 17 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “பஸ்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். அவர்களை தலிபான்கள் தடுத்து நிறுத்தி, இறக்கி விட்டனர். சிலரை விடுவித்துவிட்டு, மற்றும் சிலரை பிடித்து வைத்துள்ளனர். பிடிபட்ட வர்களில் யாரும் ராணுவ உடை அணிந்திருக்கவில்லை. ஆனால், அவர்களில் சிலர் முன்னாள் காவல்துறையினர்” என்றனர்.
அலியாபாத் தற்போது தலிபான் களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் அங்குள்ள மசூதியில் தங்களுக்கென்று தனியாக நீதி மன்றம் நடத்துவதாகவும் உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். அங்கு, பிடிபட்டவர்களின் ஆவ ணங்களைச் சரிபார்த்து அவர்க ளில் யாருக்கேனும் அரசாங் கத்து டன் தொடர்பு இருக்கிறதா எனப் பரிசோதிப்பதாகவும் உள்ளூர்வா சிகள் தெரிவித்துள் ளனர்.
தீவிரவாதிகளுக்கு ஆதரவான பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை களில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தான ஒன்றாக மாறிவிட்டது. தலிபான்களும், ஆயுதம் ஏந்திய இதர குழுவினரும் பயணிகளைக் கடத்திக் கொல்வது வாடிக்கை யாகிவிட்டது.
புதிய தலைவர்
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் தங்களின் புதிய தலைவராக ஹைபதுல்லா அகுந்த்ஸதாவை அறிவித்துள்ளனர். அமெரிக்க வான்வழித் தாக்குதலில் முல்லா மன்சூர் கொல்லப்பட்டதை அடுத்து புதிய தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.