

இந்தியாவில் விரைவில் நடை பெறவுள்ள மக்களவைத் தேர்தல் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கென பிரத்யேகமான இணையதளத்தை கொலம்பிய பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் தொடங்கியுள்ளனர்.
அந்த பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையை சேர்ந்த தேவ்ஜோதி கோஷல், ஆனந்த் கடகம், இவா தீட்சித், இந்திராணி பாசு, ரிஷி ஐயங்கார், அபர்னா அல்லூரி ஆகிய 6 மாணவர்கள் தொடங்கியுள்ள இந்த இணையதளத்தில் தேர்தல் குறித்து மாணவர்கள், தொழில் நிபுணர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் தங்களின் கருத்து களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
FiveFortyFive.com என்ற இந்த இணையதளம் தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பேஸ்புக் கிலும், ட்விட்டரிலும் வரவேற்பை பெற்றுள்ளது.