Last Updated : 13 Aug, 2016 03:38 PM

 

Published : 13 Aug 2016 03:38 PM
Last Updated : 13 Aug 2016 03:38 PM

ஹிலாரி நீக்கிய இ-மெயில்களை அமெரிக்கர்கள் பார்க்க விரும்புகின்றனர்: டிரம்ப் கட்சி பிரச்சாரம்

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனால் நீக்கம் செய்யப்பட்ட இமெயில்களை காண அமெரிக்கர்கள் ஆவலாக இருக்கின்றனர் என குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பின் தேர்தல் மாநாட்டில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக குடியரசு கட்சியின் மூத்த ஆலோகர் ஜேசன் மில்லர் டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில், “ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு செய்த ஆதாரங்கள் அடங்கிய 33,000 இமெயில்களை அமெரிக்க போலீஸின் விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் நீக்கியுள்ளார்” என்றார்.

டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில், ஹிலாரியின் மீது வரி ஏய்ப்பு செய்தார் என்று குற்றச்சாட்டப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் ஹிலாரி கிளிண்டன் அவரது வருமான வரி பற்றிய தகவலுடன் அவரது கணவர் பில் கிளிண்டனின் வருமான வரி தகவலையும் இணைத்து வெளியிட்டார்.

இந்நிலையில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் நேற்று (வெள்ளிக் கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஹிலாரியின் தகவல் தொடர்பு ஆலோசகர் ஜெனிபர், "குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் நீண்ட காலமாக மறைத்து வைத்திருக்கும் தனது வருமான வரி பற்றிய தகவல்களை வெளியிட தயாரா" என்று சவால் விடுத்துள்ளார்.

தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் ஐனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர்கள் வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருவது அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x