

உலகின் மிகப்பெரிய மணல் சிற்ப கோட்டையை ஒடிஷாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், புரி கடற்கரையில் உரு வாக்கியுள்ளார். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
அமெரிக்க மணல் சிற்ப கலைஞர் டெட் கடந்த 2015-ம் ஆண்டில் மியாமி கடற்கரையில் 45 அடி 10 அங்குலம் உயரத்துக்கு மணல் கோட்டையை உருவாக்கினார். இதுதான் உலக சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனையை ஒடிஷாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் முறிய டித் துள்ளார்.
ஒடிஷா மாநிலத்தின் புரி கடற் கரையில் பட்நாயக்கும் அவரது 45 மாணவர்களும் இணைந்து 9 நாட்களில் பிரமாண்ட மணல் கோட்டையை உருவாக்கி உள்ளனர். உலக அமைதியை கருப்பொருளாக வைத்து எழுப்பப் பட்டுள்ள இந்த மணல் கோட்டை 48 அடி 8 அங்குலம் உயரம் கொண்டதாகும். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.