

வரும் 2018-ம் ஆண்டு 2 பயணிகளை நிலவுக்கு சுற்றுலா அனுப்பி வைக்க அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து எலான் முஸ்க் தலைமையிலான இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
வரும் 2018-ம் ஆண்டு புளோரிடா மாகாணம் கேப் கனவரால் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கென்னடி ஏவு தளத்திலிருந்து (39ஏ) டிராகன் விண்கலம் (ஸ்பெஸ்ஷிப்) நிலவுக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் 2 பயணிகள் மட்டுமே பயணம் செய்வார்கள்.
உடல் மற்றும் மருத்துவ தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் விண்வெளி பயணம் செய்வோர் பெயர் மற்றும் இதர விவரங்கள் வெளியிடப்படும். மேலும் பலர் நிலவுக்குப் பயணம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்காக கோடிக்கணக்கில் கட்டணம் செலுத்தவும் தயாராக உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
கட்டண விவரங்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை. இதற்கு முன்பு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்ல சிலர் ரஷ்ய அரசுக்கு ரூ.134 கோடி செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.