

அமெரிக்க ஏவுகணை திட்டம் தங்கள் பகுதிக்கு அருகே அமைக்கப்படுவதை எதிர்த்து, தென் கொரிய பிரதமருக்கு எதிராக அந்நாட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகொரிய அரசை அச்சுறுத்தும் வகையில் கடந்த புதன் கிழமை தென் கொரிய அரசு நவீனமயமாக்கப்பட்ட ஏவுகணை திட்டத்தை அமெரிக்க உதவியுடன் சியாங்ஜு பகுதியில் அமைக்கப்படவுள்ளதாக அறிவித்தது.
புதிதாக அமைக்கப்படும் ஏவுகணைத் திட்டத்தால் உடல் நலப்பாதிப்புகளை தங்கள் பகுதி சந்திக்க நேரிடும் என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் தனது முடிவு குறித்து விளக்கமளிக்க, அப்பகுதிக்கு இன்று வந்த பிரதமர் வாங் கியோ ஆன் உரையைக் கேட்காமல் மக்கள் கூச்சலிட்டனர்.
மேலும், பிரதமரின் நடவடிக்கைக்கு எதிராக அவரது வாகனத்தின் மீது முட்டைகளையும், தண்ணீர் பாட்டில்களையும் வீசி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.