

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில் கையெறி குண்டு வீசப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 38 பேர் காயமடைந்தனர்.
பிப்ரவரி 2-ம் தேதி பொதுத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும், பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலகவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் தலைநகர் பாங்காக்கில் நாள்தோறும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணியின் ழ்போது திடீரென கூட்டத்தின் நடுவே கையெறி குண்டு வீசப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 38 பேர் காயமடைந்தனர்.
போராட்டத்தை முன்னின்று நடத்தும் ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளர் சுதேப் தவுக்சுபனை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதிர்ஷ்டவ சமாக அவர் உயிர் தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் சனிக்கிழமையும் பாங்காக்கில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. சுதேப் தவுக்சுபன் தலைமை தாங்கிய இந்தப் பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அப்போது சுதேப் தவுக்சுபன் பேசியபோது, எங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் போராட்டத்தை தீவிர மடையச் செய்யுமே தவிர நீர்த்துப் போகச் செய்யாது, பிரதமர் ஷினவத்ரா ஒரு துர் தேவதை என்று குற்றம் சாட்டினார்.