Last Updated : 16 Apr, 2017 11:19 AM

 

Published : 16 Apr 2017 11:19 AM
Last Updated : 16 Apr 2017 11:19 AM

வலிமையை பறைசாற்றும் வகையில் அதிநவீன ஏவுகணைகளுடன் வட கொரியா ராணுவ அணிவகுப்பு: அதிபர் கிம் ஜாங் பார்வையிட்டார்

வடகொரியா ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் நேற்று நடைபெற்ற ஆயுதங்கள் மற்றும் வீரர்களின் அணிவகுப்பை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டார்.

தலைநகர் பியாங்யாங் நகரில் ராணுவ இசைக்குழுவினர் இசை முழங்கியபடி அணிவகுப்பை வழிநடத்திச் சென்றனர். இதில் துப்பாக்கிய ஏந்திய வீரர்களும் அவர்களுக்கு அடுத்தபடியாக ராணுவ டாங்கிகள், அதிநவீன ஏவுகணைகள் உள்ளிட்ட இதர ராணுவ தளவாடங்களும் அணிவகுத்துச் சென்றன.

இந்நிகழ்ச்சிக்காக நகரம் முழுவதும் நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய அந்நாட்டு தேசிய வண்ணங்களால் அலங் கரிக்கப்பட்டிருந்தன. இந்தப் பேரணி, முன்னாள் அதிபரும் இப் போதைய அதிபரின் தாத்தாவுமான கிம் 2 சங்கின் நினைவிடத்தைச் சென்றடைந்தது.

இந்நிகழ்ச்சியில் அதிபர் கிம் ஜாங் உன் தவிர, ராணுவ உயர் அதிகாரிகள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங் கேற்றனர். இந்தக் காட்சிகள் அந் நாட்டு அரசு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. அப்போது, “நமது சக்தி வாய்ந்த ராணுவ வலிமையை பறைசாற்ற இன்றைய பேரணி ஒரு வாய்ப்பாக அமையும்” என தொலைக்காட்சியில் பின்னணி குரல் ஒலிபரப்பப்பட்டது.

கிம் 2 சங்கின் 105 பிறந்த நாளை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், வடகொரியாவை தனிமைப்படுத்த முயற்சி செய்து வரும் அமெரிக்காவுக்கு தனது ராணுவ வலிமையை பறைசாற்றவே இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அந்நாட்டுக்கு அமெரிக்கா பொருளாதார தடையை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது. இதனால் இவ்விரு நாடுகளுக்கிடையே பதற் றம் அதிகரித்து வருகிறது.-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x