

ஈராக்கில் தற்கொலைப் படைத் தீவிரவாதி, தன் இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்ட்டை வெடிக்கச் செய்ததில், வெள்ளிக்கிழமை அன்று 20 பேர் பலியாகினர்.
ஈராக் நாட்டின் கெர்பாலா பகுதியில் உள்ள ஷியா புனித நகரத்தின் கிழக்கு சந்தைப்பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தற்கொலைத் தாக்குதலில் 25 பேர் காயமடைந்ததாக இராக் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இத்தகவலை அந்த இயக்கத்தின் செய்திப் பிரிவு உறுதி செய்துள்ளது.