

செர்பியாவில் கடுமையான பொருளாதார மந்த நிலை நிலவும் சூழ்நிலையில் அங்கு ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் 67 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
250 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. செர்பிய முற்போக்கு கட்சியைச் சேர்ந்த இவிகா டகிக் பிரதமராக உள்ளார். அடுத்த தேர்தல் 2016ம் ஆண்டு மே மாதம்தான் நடைபெற வேண்டும். ஆனால், 72 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட செர்பியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
பொருளாதார மந்தநிலையைப் போக்குவதற்காக மேற்கொள்ளப் பட்டுள்ள ஆளும் அரசின் நடவடிக்கை மக்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த சூழ்நிலை யைப் பயன்படுத்திக் கொள்வதற் காக தேர்தலை 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நடத்த தீர்மானிக் கப்பட்டது. - பி.டி.ஐ.