ஹாங்காங் போராட்டம் சட்டவிரோதமானது: சீன அரசு அறிவிப்பு

ஹாங்காங் போராட்டம் சட்டவிரோதமானது: சீன அரசு அறிவிப்பு
Updated on
1 min read

ஹாங்காங்கில் மக்கள் நடத்தி வரும் போராட்டம் சட்ட விரோதமானது என்று சீன அரசு அறிவித்துள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் முழுமை யாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கடந்த சில நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என்பதால் போராட் டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஆயிரக்கணக்கானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளதால் ஹாங்காங் நகரமே ஸ்தம்பித்து வருகிறது.

இந்தப் போராட்டத்தை ஒடுக்க நேற்று முன்தினம் போலீஸார் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். எனினும் போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை.

2017-ம் ஆண்டு ஹாங்காங்கின் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறும் என்று சீன அரசு அறிவித்துள்ளது. எனினும், சீன அரசு அமைக்கும் குழுவே வேட் பாளர்களை தேர்ந்தெடுக்கும் என்று கூறியுள்ளது. இதுவே பிரச் சினைக்கு அடிப்படைக் காரணம். வேட்பாளர்களை சீன அரசு தேர்ந் தெடுப்பதும் ஒன்றுதான், தேர்தல் நடத்தாமல் அவர்களை நியமிப்பதும் ஒன்றுதான் என்று ஹாங்காங் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தங்கள் ஆட்சியாளரை முழுமையாக ஜன நாயக முறைப்படி தேர்ந்தெடுக்கும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுகா சுன்யிங் கூறியது: ஹாங்காங்கில் பலர் சட்டவிரோதமாக கூடி, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகின்றனர். இந்த பிரச்சி னையை தீர்க்க ஹாங்காங் அரசு முழுமையாக ஆதரவளிக்கும் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.

ஹாங்காங்கில் நடந்து வரும் ஐனநாயக போராட்டம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. போராட்டம் தீவிரமடையும் பட்சத்தில் சீன ராணுவம் ஹாங்காங்கில் புகுந்து நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சீன அரசு பத்திரிகை கடுமையாக விமர்சித்துள்ளது. ஹாங்காக்கில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து அதனை முன்பு ஆட்சி செய்த பிரிட்டன் கவலை தெரிவித்துள்ளது. பேச்சு மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமென்று பிரிட்டன் கூறியுள்ளது. 1997-ம் ஆண்டு ஹாங்காங் சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியானது. அதற்கு முன்பு பிரிட் டனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in