

இந்தோனேசியாவில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில்ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. மீட்புப் பணி படையினரால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில், "இந்தோனேசியாவில் பெய்த கனமழையின் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் முழ்கியுள்ளன. குறைந்தபட்சம் 50 நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. தலைநகர் ஜகார்த்தாவில் 1.5 மீட்டர் உயரத்துக்கு நீர் தேங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மீட்புப் படையினரால் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு பலர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். மேலும் 2016-ம் ஆண்டு இந்தோனேசியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர்.