புதிய ஏவுகணை சோதனை நடத்த வடகொரியா திட்டம்

புதிய ஏவுகணை சோதனை நடத்த வடகொரியா திட்டம்
Updated on
1 min read

வடகொரியா அண்மைக்காலமாக அணுஆயுத சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணை சோதனை களையும் அடிக்கடி நடத்தி வருகிறது.

அந்த வரிசையில் வடகொரிய ஏவுகணை தளத்தில் 2 ஏவுகணைகளைச் சோதனை செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து தென்கொரிய உளவுத் துறை வட்டாரங்கள் கூறியபோது 2 ஏவுகணைகளும் சுமார் 50 அடி நீளம் கொண்டவை. அவை எந்த நேரத்திலும் சோதனை செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in