Published : 21 Jun 2016 10:17 AM
Last Updated : 21 Jun 2016 10:17 AM

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகினால், மீண்டும் சேர முடியாது: பிரிட்டிஷ் அமைச்சர் எச்சரிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்ற முடிவை எடுத்தால், அது மீண்டும் மாற் றிக் கொள்ள முடியாத முடிவாக இருக்கும் என பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் பிலிப் ஹாமண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலி ருந்து பிரிட்டன் இணைந்திருக்க வேண்டுமா, பிரிய வேண்டுமா என்பது தொடர்பான வாக்கெடுப்புக் காக பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

பொதுவாக்கெடுப்பு மூலம் இது தீர்மானிக்கப்பட உள்ளது. பிரிய வேண்டும் எனக் கூறும் தரப்பினரும், கூடாது எனக் கூறும் தரப்பினரும் தங்களின் தரப்புக்கு ஆதரவு திரட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் பிலிப் ஹாமண்ட் கூறும்போது, பிரிட்டன் மக்கள் அனைவருக்கும் ஒரு செய்தியைக் கொண்டு செல்ல முயல்கிறோம். அதாவது, பிரிவது தொடர்பாக நாம் எடுக்கும் முடிவு மாற்றிக் கொள்ள முடியாதது. பிரிய வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டால் அதிலிருந்து திரும்பிச் செல்ல முடியாது. பின்னாட்களில் பிரிட்டன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்து டன் இணைய முடியாது. மீண்டும் இணைய வேண்டுமெனில், சில ஒப்புக்கொள்ள முடியாத நிபந் தனைகளை ஏற்றுக்கொண்டாக வேண்டும். யூரோ உறுப்பினர், பாஸ்போர்ட் இல்லாமல் நாடுக ளுக்கு பயணம் செய்தல் போன்ற வற்றிலிருந்து விலக நேரிடும்” எனத் தெரிவித்தார்.

இந்தியாவுடனான வர்த்தகம்

பிரதமர் கேமரூன் கூறியதாவது: இந்தியா, சீனா போன்ற பொரு ளாதார வளர்ச்சி பெற்று வரும் நாடுகளுடன் நாம் அதிக அளவு பொருளாதார வர்த்தகம் மேற் கொண்டு வருகிறோம். 1972-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் நாம் இணைந்ததில் இருந்து ஐரோப்பிய பொருளாதாரம் மிக நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது.

இந்தியாவுடன் நாம் அதிக அளவு வர்த்தகத்தில் ஈடுபட வேண் டும். எனினும், அது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதால் ஏற்படும் இழப்பைச் சரிக்கட்டும் அளவுக்கு இருக்காது. இந்தியா வுடன் நாம் இதை விட அதிகம் வர்த்தகம் செய்ய வேண்டும். இந் தியாவுடன் வர்த்தக ஒப்பந் தம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், நாம் நமது பிரதான சந்தையி லிருந்து நம்மைத் துண்டித்துக் கொள்வது, பொருளாதார பைத்திய க்காரத்தனம். நமது பிரதான சந்தை யைத் தொடர்ந்து கொண்டே, பிற சந்தைகளிலும் நுழைய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x