

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தின் பர்மிங்காம் நகரில் பொது வீட்டுரிமை சமூகம் நடத்திய அமைதி பேரணியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பர்மிங்காம் மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் ப்ரையின் ஷில்டன் கூறும்போது "இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.25 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சுடப்பட்ட ஆறு பேரும் பேரணியை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அப்பாவி பொது மக்கள்.
இந்த துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியது யார் என்று இன்னும் அறியப்படவில்லை. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்றார்.