

இந்தோனேசியாவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 19 பேர் பலியாகினர்.
இந்தோனேசிய நாட்டின் தீவுப் பகுதியான ஜாவாவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 19 கிராமவாசிகள் பலியானதாகவும், சில மாவட்டங்களில் மக்கள் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.
இந்தோனேசியாவின் கரட் பகுதி இந்த மழைக்கு பெரும் பாதிப்புள்ளாகியிருக்கிறது.
புதன்கிழமை மட்டும் சுமார் 1000 கிராமவாசிகள் அவர்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.