

நேபாளத்தின் மலைச் சாலையில் நேற்று முன்தினம் பஸ் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். தலைநகர் காத்மாண்டுக்கு வடமேற்கே 400 கி.மீ. தொலைவில், டோட்டி மாவட்டம், சட்டிவான் என்ற கிராமத்தின் அருகில் இந்த விபத்து நிகழ்ந்தது.
நேபாளத்தில் 2 வாரம் கொண்டாடப்படும் தசரா பண்டிகையை முன்னிட்டு இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தனர். பஸ்ஸில் நெருக்கியடித்துக்கொண்டு சுமார் 100 பேர் பயணம் செய்துள்ளனர்.
பஸ் கட்டுப்பாட்டை இழந்து 300 மீட்டர் ஆழப் பள்ளத்தில் கவிழ்ந்தது. மீட்புப் பணியில் 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் 25 பேரில் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர்.