Published : 23 May 2017 09:33 AM
Last Updated : 23 May 2017 09:33 AM

ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது இனவெறி தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் இந்திய ஓட்டுநர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அங்கு வாழும் இந்தியர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் தாஸ் மானியா மாகாணம், ஹோபர்ட் நகரில் பர்தீப் சிங் என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு கணவன், மனைவி அவரது காரில் ஏறினர்.

அந்தப் பெண் காரில் ஏறியது முதல் அவ்வப்போது கார் கதவை திறந்து கழிவு பொருட்களை வெளியில் வீசியதாகக் கூறப் படுகிறது. கார் கதவை திறந்தால் விபத்து நேரிடும் என்று ஓட்டுநர் பர்தீப் சிங் எச்சரித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த தம்பதியர், கார் ஓட்டுநரை இன ரீதியாக குறிப்பிட்டு அவதூறாகப் பேசினர். காரை விட்டு கீழே இறங்கும்போது கணவரும் மனைவியும் சேர்ந்து பர்தீப் சிங்கை கீழே தள்ளி அடித்து உதைத்தனர்.

அந்த வழியாக நடந்து சென்றவர்கள் பர்திப் சீங்கை காப் பாற்றி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து கணவன், மனைவி இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மார்ச் 25-ம் தேதி ஆர்கிள் என்ற இடத்தில் லி மேக்ஸ் ஜாய் என்ற இந்திய ஓட்டுநரை 4 இளைஞர்கள் சேர்ந்து தாக்கினர். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதன்காரணமாக ஆஸ்திரேலியா வுக்கு உயர் கல்வி கற்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x