Last Updated : 19 Jul, 2016 04:01 PM

 

Published : 19 Jul 2016 04:01 PM
Last Updated : 19 Jul 2016 04:01 PM

கடத்தப்பட்ட தலைமை நீதிபதியின் மகனை தாலிபான்களிடமிருந்து மீட்ட பாக். ராணுவம்

பாகிஸ்தான், சிந்து மாகாண உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் மகனும் இளம் வழக்கறிஞருமான அவைஸ் அலி ஷா (20) என்பவரை தாலிபான்கள் பிடியிலிருந்து மீட்டது பாகிஸ்தான் ராணுவம்.

கராச்சியிலிருந்து அவைஸ் அலி ஷா கடந்த மாதம் கடத்தப்பட்டார். இன்று வன்முறைகள் நிறைந்த கைபர் பதுன்கவா மாகாணத்தில் ராணுவம் அதிரடி சோதனை மேற்கொண்டு அவைஸ் அலி ஷா-வை தாலிபான்கள் பிடியிலிருந்து மீட்டுள்ளது பாகிஸ்தான் ராணுவம்.

இந்தச் சண்டையில் 3 தாலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மீட்கப்பட்ட அவைஸ் அலி ஷா, சிந்து மாகாண உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சாஜத் அலி ஷாவின் மகன் ஆவார். மீட்கப்பட்ட இவர் குடும்பத்துடன் இன்று காலை 9.30 மணியளவில் சேர்பிக்கப்பட்டார்.

கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி கராச்சியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே அவைஸ் அலி ஷா-வை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். அதாவது கைது செய்யப்பட்ட தாலிபான் தீவிரவாதிகளை விடுவிக்க இவரை பணயமாகப் பயன்படுத்தலாம் என்ற அச்சத்திற்கிடையே இந்த உயர் மட்ட கடத்தல் விவகாரம் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்படுத்தியது.

இரண்டு பெரிய அரசியல்வாதிகளின் மகன்களை தாலிபான் இதற்கு முன்பாகக் கடத்தி சுமார் 5 ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் கைதியாக வைத்திருந்துவிட்டு பிறகு விடுவித்ததையடுத்து தற்போது அவைஸ் அலி ஷா மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்ட முன்னாள் பஞ்சாப் ஆளுநர் சல்மான் தசீர் என்பவரது மகன் ஷாபாஸ் தசீர் கடத்தப்பட்டு ஆப்கானில் சிறைவைக்கப்பட்டார், இவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். அதே போல் முன்னால் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மகன் அலி ஹைதர் 3 ஆண்டுகள் சிறைப்பிடிப்புக்குப் பின் விடுவிக்கப்பட்டார். தற்போது இது 3-வது உயர்மட்ட கடத்தல் சம்பவமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x