

ஈரானில் பணியாற்றி வரும் வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டின் நிருபர் ஜேசன் ரெசையான் (38), அவரது மனைவியும் அபுதாபி நாளேடு ஒன்றின் நிருபருமான யெகனேஷ் சலகேகி ஆகிய இருவரும் ஈரானில் கடந்த ஜூலை 22-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பெண் நிருபர் யெகனேஷ் சலேகியை ஈரான் அரசு ஜாமீனில் விடுதலை செய்தது. அவரது கணவரும் வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டின் நிருபருமான ஜேசன் ரெசையான் தொடர்ந்து தடுப்புக் காவலில் இருந்து வருகிறார். சலேகி ஈரானைச் சேர்ந்தவர். அமெரிக்கரான ரெசையான் ஈரானிலும் குடியுரிமை பெற்றுள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை ஈரான் அரசு அறிவிக்கவில்லை.