

ஜப்பானில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் தாக்கம் 5.5 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் தொடர்பாக சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வடகிழக்கு ஜப்பானின் இவேட் ப்ரீஃபெக்சூர் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருக்கிறது. ஆனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேத விபரங்கள் குறித்து உடனடியாக தகவல் ஏதும் இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.