மைக்ரோசாப்ட் தலைவராக ஆசைப்பட்டேன்: சத்யா நதெள்ளா பேட்டி

மைக்ரோசாப்ட் தலைவராக ஆசைப்பட்டேன்: சத்யா நதெள்ளா பேட்டி
Updated on
1 min read

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக வேண்டுமென்று மிகத் தீவிரமாக ஆசைப்பட்டேன் என சத்யா நாதெள்ளா கூறியுள்ளார்.

மென்பொருள் துறையில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது பேட்டி மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இப்பொறுப்பில் என்னால் சாதிக்க முடியும். எனது இப்பதவியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் எனது நோக்கம்.

இப்போதுள்ள நிலையை நான் அடைந்திருப்பதற்கு எனது தீவிரமான செயல் விளைவுகள்தான் காரணம். மனித சக்தியால் முடியாதது எதுவும் இல்லை. எங்களிடம் 13 லட்சம் பேர் உள்ளார்கள். மென்பொருள் துறையில் உலகுக்கு பல நன்மை தரும் விஷயங்களை எங்களால் தரமுடியும்.

புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். அதே நேரத்தில் நிறுவனத்தின் வர்த்தகத்தையும் இதேபோல முன்னெடுத்துச் செல்வோம்.

நவீன தொழில்நுட்பத்தின் மூலமும், கண்டுபிடிப்புகள் மூலமும் நாம் அனைவருமே ஒவ்வொரு நாளுக்கும் நம்மை அறியாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறோம். வாழ்க்கை முழுவதும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் மாணவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என நாதெள்ளா கூறியுள்ளார்.

ஆண்டு சம்பளம் ரூ. 112 கோடி

சத்யாநாதெள்ளாவின் ஆண்டு சம்பளம் ரூ.112 கோடியாகும்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் போனஸ், நிறுவனத்தின் பங்கு ஆகியவை இதில் அடங்கும். 46 வயதாகும் சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 22 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

நிறுவனத்தின் ஆன்லைன் சேவை விளம்பரத்துறை, சேவை உள்ளிட்ட வெவ்வேறு துறைகளில் சத்யா நாதெள்ளா பணியாற்றியுள்ளார். அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலமாக இல்லை என்றாலும், சத்யா நாதெள்ளா தீவிர கிரிக்கெட் ரசிகர் ஆவார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in