

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரபலமான உணவகத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் என்றும் அதில் ஒருவர் ஆளும்கட்சி தலைவரின் மகன் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது.
டாக்காவில் உள்ள ஹோலி ஆர்டிசன் பேக்கரி என்ற உண வகம் மிகவும் பிரபலமானது. சுற்றுலா வுக்கு வரும் வெளிநாட்டு பயணி களுக்கு இந்த உணவகம் பிடித்த மான இடமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் அண்மையில் இந்த உணவகத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் ஏழு பேர் அங்கி ருந்த 19 வயது இந்திய இளம் பெண் தாரிஷி ஜெயின், 9 இத்தாலி யர்கள், 7 ஜப்பானியர்கள், வங்க தேச வம்சாவளி அமெரிக்கர், 2 வங்கதேசத்தியர் என மொத்தம் 20 பேரை கொன்று குவித்தனர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 6 தீவிர வாதிகள் கொல்லப்பட்டனர். ஒருவர் மட்டும் உயிருடன் பிடிபட் டார். இவர்கள் அனைவருமே 20 வயதுள்ள இளை ஞர்கள்.
இந்நிலையில் உயிருடன் பிடி பட்ட தீவிரவாதியிடம் நடத்தப் பட்ட விசாரணையில் தீவிரவாத இளைஞர்கள் அனைவரும் வங்க தேசத்தின் பெரும் பணக்கார குடும் பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நன்கு படித்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் அம்பலமாகியுள்ளது. மேலும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டவர்களில் 5 பேர் மட்டுமே தீவிரவாதிகள் என்பதும் ஒருவர் பார்வையாளராக நின்றிருந் தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து வங்கதேச உள் துறை அமைச்சர் அசாதுஸாமான் கான் கூறும்போது, ‘‘பெரும் பணக் கார குடும்பத்தில் பிறந்து நன்கு படித்த இளைஞர்களான அவர்கள், ஜிஹாதிகளாக எப்படி மாறினார்கள் என்பது தெரியவில்லை. தீவிரவாதி களாக மாறுவது தற்போது பேஷனாகிவிட்டது’’ என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் வீட்டில் இருந்து காணாமல் போன வங்கதேசத்தின் ஆளும் அவாமி லீக் கட்சி தலைவரின் மகனான ரோஹன் இம்தியாஸும் தீவிர வாதிகளுள் ஒருவர் என தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் வடமேற்கு போக்ராவில் உள்ள மதரஸாவில் படித்து வந்த கைரூல் என்பவரும் தீவிரவாதியாக மாறியுள்ளார். ஏற்கெனவே நடந்த ஒரு தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் கைரூலை வங்கதேச போலீஸார் கடந்த 7 மாதங்களாக தேடி வந்ததாக கூறப் படுகிறது. மலேசியாவில் உள்ள ஆஸ்திரேலியாவின் மோனஷ் பல்கலைக்கழகத்தில் படித்து சிறந்த தடகள வீரர் என பெய ரெடுத்த நிப்ராஸ் இஸ்லாம் என்ற இளைஞரும் தீவிரவாதியாக மாறியிருப்பது அவரது நண்பர் களை வெகுவாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த 5 தீவிரவாதிகளில், 4 பேர் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடி யுடன் சிரித்தபடி ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கிடை யில் வங்கதேச போலீஸார் மேற் கொண்ட தேடுதல் வேட்டையில் நேற்று தலைமறை வாக இருந்த 2 தீவிரவாதிகள் பிடிப்பட்டனர்.
வறுமை காரணமாகவே திசை மாறி தீவிரவாத அமைப்புகளில் இளைஞர்கள் சேர்ந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், படித்த, பணக்கார குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களும் தற்போது தீவிர வாதிகளாக உருவாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.