துப்பாக்கிச் சூடு சம்பவம்: மேலும் ஒருவர் பலி

துப்பாக்கிச் சூடு சம்பவம்: மேலும் ஒருவர் பலி
Updated on
1 min read

அமெரிக்கப் பள்ளியொன்றில் மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

வாஷிங்டன் அருகே சியாட்டி லில் உள்ள மேரிஸ்வில்லே பில்சக் பள்ளியில் படித்த ஜெய்லன் பிரைபெர்க் (15), காதல் பிரச்சினை காரணமாக கேன்டீன் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கி யால் சரமாரியாக சுட்டார். அதில், அந்த மாணவனின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் 4 பேர் காயமடைந் தனர். இறுதியில், தன்னைத் தானே சுட்டுக் கொண்டு பிரை பெர்க்கும் உயிரிழந்தார். காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாணவி ஜியா சோரியானா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவரின் உடலில் கண் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in